அரசியல்உள்நாடு

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் எம்.பிக்கள்!

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என சிலரை இன்று (25) இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

சிச்சுவான் மக்களுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி அநுர

editor

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் – ஓய்வூதியத் திணைக்களம்.