சூடான செய்திகள் 1

ஐ.தே.க. மூன்று துண்டுகளாக உடையும்: பிரபல அரசியல்வாதி

ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் வாரங்களில் மூன்று துண்டுகளாக உடையுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஒரு அணியாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சார்ந்தவர்கள் ஒரு அணியாகவும் பொது ஜன பெரமுனவுக்கு ஆதரவு அளிக்க விரும்புபவர்கள் மற்றுமொரு அணியாக பிரிந்து செல்வார்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

Related posts

கொழும்பில் மட்டுப்படுத்தப்படவுள்ள போக்குவரத்து

அலி லார்ஜானி இலங்கை விஜயம்

ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் தின செய்தி