சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரில் மாதம் மீண்டும் விசாரணைக்கு…

(UTV|COLOMBO) ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக போலி ஆவண தயாரிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இரு தரப்பினரும் சமரசமாக இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(25) குறித்த வழக்கு கொழும்பு பிரதான மேல்நீதிமன்ற நீதவான் விகும் களுவாரச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளால் இருதரப்பும் சமரச உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி இந்த சமரசம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அடுத்த மாதம் 4 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

உயிரிழந்த குடும்பத்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு

டேன் பிரியசாத் கைது

பாடசாலைகளில் ஆரோக்கிய உணவு சிற்றூண்டிச்சாலை