உள்நாடு

வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது

(UTV|கொழும்பு)- மட்டக்குளிய-சமிதிபுர பகுதியில் சுமார் 215 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி உதவி பொலிஸ்மா அதிபர் குணதிலக அவர்களின் ஆலோசனையின் கீழ் மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றின் போதைப்பொருள் வர்த்தகரான வெல்லே சுரங்கவின் உறவினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் 2005ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விலகிச் சென்று வெல்லே சுரங்கவின் குற்ற செயல்களுக்கு ஆலோசனை வழங்கி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தலதாவின் பதவி வெற்றிடமானதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

editor

ஜனாதிபதி ஜப்பானுக்கு

கல்வி அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம்!