உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருட்களுடன் நான்கு இராணுவ வீரர்கள் கைது

ஐஸ் போதைப்பொருட்களுடன் நான்கு இராணுவ விசேட படையணி வீரர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கலேன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவின் உப்புல்தெனிய பகுதியில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கலேன்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

அக்மீமன, ஹொரவ்பொத்தானை, லுனுகல மற்றும் பரசன்கஸ்வெவ ஆகிய பகுதிகளை சேர்ந்த நான்கு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (14) கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அவுஸ்திரேலியாவிற்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து

பிரபாகரனை பின்பற்றும் சஜித் – பிரசன்ன ரணதுங்க

ராகமயில் துப்பாக்கிச் சூடு