உள்நாடுவிசேட செய்திகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள பத்து குற்றவாளிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

நாட்டின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் பத்துப் பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அங்கு அரசியல் தஞ்சம் கோரியதால், அந்த நாடுகளின் சட்டங்களின்படி அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது கடினமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சக்திவாய்ந்த குற்றவாளிகளான காஞ்சிபான இம்ரான், குடு அஞ்சு, ரொட்டம்ப அமிலா மற்றும் ரூபன் ஆகியோர் ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்று அரசியல் தஞ்சம் பெற முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ரத்கம விதுர, கொஸ்கொட சுஜி, லால், அனன்சி மொரில் மற்றும் முகமது சித்தீக் போன்ற பல குற்றவாளிகள் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல சக்திவாய்ந்த பாதாள உலக குற்றவாளிகள் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

Related posts

அரசாங்கத்தின் அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போர்க்கொடி

editor

சீதாவகபுர நகர சபை, ஐக்கிய மக்கள் சக்தி வசம்!

editor

அனுர பத்திரனவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை