வகைப்படுத்தப்படாத

ஐரோப்பிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம்

நேற்று ஜேர்மனி, போலந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு  வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெப்பம் உயரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அந்நாடுகளில்  மட்டுமல்லாமல் பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று 40 பாகை செல்சியஸ்க்கு மேல் ஆக உயரக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வட ஆப்பிரிக்காவில் அடித்த வெப்பமான காற்றே ஐரோப்பியாவில் வீசிய அனல் காற்றுக்கு காரணமென கூறப்படுகிறது.

கடந்த கால தரவுகளுக்கமைய 2003 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் அதிகரித்த வெப்பத்தின் காரணமான 14,000 மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.

 

 

 

Related posts

Cabinet opposes implementing death penalty

US approves Taiwan arms sale despite Chinese ire

இத்தாலியை கடுமையாய் தாக்கிய புயல்