அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு – மாத்தளை மாநகர சபையின் அதிகாரம் NPP வசம்

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அசோக கொட்டச்சி 12 வாக்குகளைப் பெற்று மாத்தளை மாநகர சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அதன் பிரதி மேயராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எம்.மோகன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

மாத்தளை மாநகர சபையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், மத்திய மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் சமிலா அதபத்துவின் தலைமையில் மேயர் மற்றும் பிரதி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று (23) மாத்தளை மாநகர சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

வாக்களிப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 10 உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்து, மண்டபத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன் பிறகு, உள்ளூராட்சி சபை ஆணையாளர் வாக்கெடுப்பை நடத்தினார். இதன்போது மேயர் மற்றும் பிரதி மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சட்டத்தை மீறி பதவி வகிக்க தகுதியற்ற பெண் உறுப்பினருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சபையை விட்டு வௌியேறியதாகவும், இந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது எனவும் சபையிலிருந்து வௌிநடப்பு செய்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 10 உறுப்பினர்களை வென்றிருந்தது.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 1 உறுப்பினரையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1 உறுப்பினரையும், சர்வஜன பலய 1 உறுப்பினரையும், ஐக்கிய தேசியக் கூட்டணி 1 உறுப்பினரையும் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுனில் ஜயவர்தனவின் கொலை : சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

தெஹியத்தகண்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

editor

இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை