அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள அதிரடி முடிவு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஐக்கிய தேசிய கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தக் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள, ஜனாதிபதி சட்டத்தரணி ரெனோல்ட் பெரேரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் பல கட்சி முறையிலான ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவது ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related posts

கட்டுப்பாட்டை இழந்து கெப் வண்டி விபத்தில் சிக்கியது – இருவர் உயிரிழப்பு

editor

நிவர் சூறாவளியின் தாக்கம் குறைகிறது

முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மாவட்ட செயலாளருக்கு வழங்கப்பட்ட கெளரவம்!