அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் தலதா அத்துகோரள

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தலதா அத்துகோரள இன்று (10) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

குறித்த நிகழ்வு சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்பது விசேட அம்சமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க மற்றும் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts

மழையுடனான வானிலை மேலும் தொடரும்

கொரோனா : பலி எண்ணிக்கை 73

‘Sinopec’ நிறுவனம் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளது