உள்நாடு

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து நான்காவது நிவாரண உதவி விமானம் இலங்கையை வந்தடைந்தது

கடும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜயத்திலிருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிய நான்காவது விமானம் இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது.

ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானப்படைக்குச் சொந்தமான C-17A விமானம் மூலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட இந்த உதவிப் பொருட்களை, இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் சஷீந்ர விஜேசிறிவர்தன உத்தியோபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான தேடுதல் பணி, மீட்புப்பணி மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கிலான உணவு, நிவாரணப் பொதிகள் மற்றும் மீட்பு வாகனங்கள் ஆகியவை இந்த உதவிப் பொருட்களில் அடங்கும்.

இந்த கடினமான சமயத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உடனடி உதவிகளுக்கு இலங்கை நன்றியுடன் பாராட்டுத் தெரிவித்துள்ளது.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor

தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உடனடியாக கொண்டுவர வேண்டும் – மனோ கணேசன் எம்.பி

editor

2,000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

editor