வணிகம்

ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) –  அரசாங்கம் முன்னெடுக்கும் சுபீட்சத்தின் இலக்கு என்ற வேலைத்திட்டத்தின் கீழ் சிறிய ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் ரவீந்ர ஹேவாவித்தாரண தெரிவித்துள்ளார்.

இதற்கென விவசாயிகளுக்கு தேவையான சூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

சிறு ஏற்றுமதிப் பயிர்களின் மூலம் கூடுதலான அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதிப் பயிர் ஆராய்ச்சி நிலையங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் இணைக்கும் வகையில் கைதொழில் ஆய்வு பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தென்னை மரங்களை வெட்டும் நடவடிக்கை விரைவில் வரையறுக்கப்படவுள்ளதுடன், இதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவும் உள்ளன. இலங்கையின் சிறிய ஏற்றுமதி பயிர்களுக்கு கூடுதலான கிராக்கி நிலவுவதாகவும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

இன்று முதல் வரிகள் இரத்து – நிதியமைச்சு

இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு மீதான வரி அதிகரிப்பு

வாகனங்களின் விலை அதிகரிப்பு