உள்நாடு

ஏப்ரல் 14 வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம்

(UTV | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (05ஆம் திகதி) தெல்வத்தை, பத்தேகம, தெதியவல, முலதியன, அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் உடமலல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Related posts

இலங்கையில் வசதி குறைந்த பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய தனது குடும்ப சொந்த நிதியில் 100 கோடி ரூபாய்களை ஒதுக்கிய பாத்திமா சலீம்

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவம் – பொலிஸ் விசேட குழு விசாரணை

editor