கேளிக்கை

எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

(UTV|இந்தியா)- கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

எஸ்.பி.பி. முன்பை விட இப்போது கொஞ்சம் நன்றாகவே உள்ளார் நிச்சயம் குணமடைந்து வீடு திரும்புவார் என்று கூறினார்

தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எஸ்.பி.பி. உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுவாசத்தை சீராக வைத்துக் கொள்ள தொடரும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கல்யாணம் கட்டிகிட்டு ஓடிப்போலாமா என்று த்ரிஷாவிடம் கேட்ட ஆர்யா

திரைத்துறை போராட்டத்தை புறக்கணித்த முன்னணி நடிகைகள்

ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ் ராக்கை ‘பளார்’ என அறைந்த வில் ஸ்மித் [VIDEO]