வகைப்படுத்தப்படாத

எழுத்தூரில் நீர் உள்வாங்கும் நிலையம் நாளை மறுதினம் திறப்பு

(UDHAYAM, COLOMBO) – மன்னார், எழுத்தூரில் நீர் உள்வாங்கும் நிலையத்தினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்துவைக்கவுள்ளார்.

எதிர்வரும் 07ம் திகதி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்படவுள்ள இந்த நீர் உள்வாங்கும் நிலையம் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் சரத் சந்திரவிதான, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், வட மாகாணசபை உறுப்பினர் எச்.எம். றயீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

ஜனாதிபதி சியோல் சென்றடைந்தார்

Two schoolgirls swept away by floodwaters; body recovered

23 பேரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு பிரித்தானியா உத்தரவு