சப்ரகமுவ மாகாண கல்வி, கலாசாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சப்ரகமுவ மாகாண அரச இலக்கிய விழா இம்முறை மிக எளிமையான முறையில் படைபெற்றது.
நேற்றையதினம் (11) இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விழாவில், இரத்தினபுரி மாவட்டத்தின் பல கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ சுனித்தா, சப்ரகமுவ மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் தலைவர் எச்.டபிள்யூ. குணதாச, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுணுஆராய்ச்சி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்
