உள்நாடுபிராந்தியம்

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் கோர விபத்து – 20 க்கும் மேற்பட்டோர் காயம்

எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் 15 ஆவது மைல்கல்லுக்கு அருகில், பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து, இன்று வியாழக்கிழமை இரவு (செப்டம்பர் 4) இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் எல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சிவனொளி பாத மலை வனப் பகுதியில் தீப்பரவல்

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் புதிய தபால் நிலையக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

editor

பெரன்டிக்ஸ் கொவிட் கொத்தணி – விசாரணை செய்ய புதிய குழு நியமனம்