அரசியல்உள்நாடு

எல்பிட்டிய உள்ளூராட்சி சபை தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய பொதுஜன பெரமுன.

எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கு போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

அதற்கான கட்டுப்பணத்தை ஏற்கும் பணி கடந்த 26ஆம் திகதி ஆரம்பித்த போதிலும், அதற்கு முன் எந்த ஒரு குழுவும், கட்சியும் கட்டுப் பணத்தை வைப்பிலிடவில்லையென தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டது.

அதன்படி, கட்டுப்பணம் தொகையை ஏற்றுக்கொள்வது செப்டம்பர் 11ஆம் திகதி மதியம் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல் அதிகாரியினால் கடந்த 26ஆம் திகதி வாக்கெடுப்புக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Related posts

இலஞ்சம் பெற்ற பெண் அதிபர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

editor

முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளது

editor

இன்றும் மருந்தகங்கள் திறப்பு