உள்நாடு

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் மோதி கோர விபத்து – நான்கு பேர் காயம்

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் இன்று (20) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுஸரும் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்துள்ளது.

இந்நிலையில், எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருள் வேறு ஒரு பவுசருக்கு மாற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

UPDATE: ரிஷாத் மற்றும் அவரது சகோதரர் கைது

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு