உள்நாடு

எம்பிலிபிட்டி பொது வைத்தியசாலையை தரமுயர்வு

(UTV| இரத்தினபுரி) – எம்பிலிபிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையை அனைத்து நவீன மருத்துவ வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கமை விரைவில் சப்ரகமுவ மாகாண சபையின் சுகாதார அமைச்சின் கீழ் குறித்த வைத்தியசாலையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்

இரத்தினபுரிய, அம்பாந்தோட்டை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலிருந்து நோயாளர்கள் இங்கு வருகை தருவதனால் இந்த வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்தவுக்கு அழைப்பு

செலவின வரம்புகள் மீறப்பட்டால், நிறுவன தலைவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்

நாம் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமான நாட்டையே வழங்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor