அரசியல்உள்நாடு

எமது ஆட்சிக் காலத்தில் நாம் மக்களைக் கைவிடவில்லை – நாமல் ராஜபக்‌ஷ எம்.பி

நீண்டகாலமாகத் தீர்க்கப்பட முடியாமல் தொடரும் மலையக மக்களின் அடிப்படைச் சம்பளப் பிரச்சினைகள் தொடர்பில் எந்தவொரு கட்சியும் முன்னெடுக்கும் ஆக்கபூர்வமான தீர்மானங்களுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தனது முழு ஆதரவையும் வழங்குமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது ஆட்சிக் காலத்தில் நாம் மலையக மக்களைக் கைவிடவில்லை. அன்றையபொழுதில் அம்மக்களுக்குத் தேவையான சம்பள உயர்வை முடிந்தளவு பெற்றுக் கொடுத்தோம்.

ஆனால், இன்றைய ஆட்சியாளர்களினால் அம்மக்களின் அடிப்படைச் சம்பளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்தவித நகர்வையும் மேற்கொள்ள முடியவில்லை.

இருந்தபோதிலும், இச்சம்பளப் பிரச்சினை தொடர்பில் எந்தக் கட்சியேனும் ஆக்கபூர்வமான முன்னகர்வைக் கொண்டுவந்தால் அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்

அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதற்குரிய இலகுநிலையை கம்பனிகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இலங்கைத் தேயிலைக்கான கிராக்கியை உலகளாவிய ரீதியில் அதிகரிப்பதற்கான சூழ்நிலையை கம்பனிகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக இங்குள்ள தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.

ஆகையால், இந்த விடயம் தொடர்பிலும் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Related posts

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் – செந்தில் தொண்டமான்

editor

விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தெஹிவளை துப்பாக்கிதாரி பலி

editor

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு