அரசியல்உள்நாடு

என்னை கைது செய்ய முயன்றார்கள் – நாமல் எம்.பி – 10 வருடங்களுக்கு பின் சுதந்திரக் கட்சிக்கு சென்றார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவொன்று சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சென்றிருந்தனர்.

எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் எதிர்ப்பு பேரணி தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

டார்லி வீதியில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் அதன் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, ஜனநாயகத்திற்காக திசைக்காட்டிக்கு வாக்களித்த அனைத்து தரப்பினரும் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர்.

21ஆம் திகதி அந்த பொய்யை நாம் அம்பலப்படுத்துவோம் என்று கூறினார்.

ஊடகவியலாளர்: சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகுதானே சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு வருகின்றீர்கள்?

பதில் வழங்கிய நாமல் ராஜபக்ஷ, பேரணி குறித்து கலந்துரையாட வந்தோம். அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என அரசாங்கத்திடம் கூறுகின்றோம்.

கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவற்றில் 50% கூட செய்யப்படவில்லை. அப்படியிருக்க ஜனாதிபதி 4 1/2 மணி நேரம் பேசுகிறார்.

யார் 1,700 கெப் வாகனங்களைக் கேட்டது? எந்த நிறுவனம் கெப் வாகனங்களை கோரியுள்ளது.

அரசாங்கம் சிலரை மகிழ்விக்க வேண்டியிருக்கலாம். அரசாங்கம் பொய் சொல்கிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

‘ஐஸ்’ சம்பந்தமாக என்னைத்தான் கைது செய்ய முயன்றார்கள். அது பெலவத்தையிலேயே சரிந்து விழுந்துள்ளது.

அனைவரும் 21ஆம் திகதி நுகேகொடையில் கூடுவார்கள் என்று தெரிவித்தார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

ஃபிட்ச் ரேட்டிங் இலங்கையின் கடன் மீள் செலுத்துகை தரநிலையை மேலும் குறைத்துள்ளது

உடன் அமுலாகும் வகையில் ஒரு நபருக்கு 5 லிட்டராக வரையறுக்கப்பட்ட மண்ணெண்ணெய்