இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதில் முன்னணியில் இருந்தவர் தனது தந்தையான ராஜித சேனாரத்ன என அவரது மகனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன கூறுகிறார்.
ராஜித சேனாரத்னவை குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் முன்னர் விடுவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது தந்தை கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் வெளியே வைத்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.