விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தமது வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி கோரியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர் நேற்று (30) மாலை அனுமதி கோரியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
அனுமதி கோரிக்கையை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
