உள்நாடு

எதிர்வரும் வாரங்களுக்குள் மேலும் எட்டு லட்சம் பைஸர் தடுப்பூசிகள்

(UTV | கொழும்பு) – இலங்கையின் கொவிட்-19 அவசர பதிலளிப்பு மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை தயார் செய்யும் உலக வங்கியின் செயற்றிட்ட நிதியை பயன்படுத்தி, 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தருவிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதன் முதல் கட்டமாக 26,000 பைஸர் தடுப்பூசிகள் நேற்று இலங்கைக்குக் கிடைத்தன.

மேலும் எட்டு லட்சம் பைஸர் தடுப்பூசிகள் எதிர்வரும் வாரங்களுக்குள் இலங்கைக்குக் கிடைக்கவிருக்கிறதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ரயில் கட்டணம் உயர்வு

‘போலிப் போராட்டம் என்ற போர்வையில் சிங்கள பௌத்த பொதுக் கருத்தைத் தொடாதே’ என்ற தொனியில் பேரணி

`சைனோஃபாம்` இரண்டாவது `டோஸ்` ஞாயிறன்று