உள்நாடு

எதிர்வரும் வருடம் ஜனவரி முதல் 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது.

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் வருடம் ஜனவரி முதல் 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது.

எதிர்வரும் வருடம் தினமும் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றயதினம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஜனவரி மாதம் முதல் தினமும் 10 மணிநேரம் மின்சாரம் தடைபடலாம் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக இன்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் பண்டிகை காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 24,25,26,31 மற்றும் ஜனவரி முதலாம் திகதியும் மினவெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது எனவும், இன்றும் நாளையும் 02 மணி நேரமும், 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்வு

இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் – சவூதி தூதுவர்

editor

ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் : புதிய வழிகாட்டல்கள்