அரசியல்உள்நாடு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்குவைக்கிறது – மொட்டு கட்சி.

(UTV | கொழும்பு) –

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளது. கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் நாளைய தினம் விசேட நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாம் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஊருடன் கலந்துரையாடல் என்னும் பெயரில் ஓர் திட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் மொட்டு கட்சி இந்த திட்டத்தின் நீட்சியாக நாளை முதல் ஊர்களுக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடும் திட்டமொன்றை கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்தல். குழுக்களையும் அமைத்தல், கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகளை கண்டறிதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நடவடிக்கைகளை ஒருங்கமைப்பு செய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமர் ஹரிணி, இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

editor

இதுவரையில் 2,849 பேர் பூரண குணம்

கைது செய்யப்பட்ட 11 அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை