அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சியினரின் வாயை மூட ஆளும் தரப்பினர் முயற்சிக்கின்றனர் – சஜித் பிரேமதாச

76 வருட வரலாற்றில் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவது எவ்வாறு போனாலும், மக்கள் தமது பிரச்சினைகளை இப்போது எதிர்க்கட்சித் தலைவரிடமே முன்வைக்கின்றனர்.

தற்போதைய அரசாங்கத்திற்கு இலட்சக்கணக்கான வாக்குகளை வழங்கி, பாராளுமன்றத்தில் 225 இல் 159 ஆசனங்களை பெற்றுத் தந்து, தெளிவான பெரும்பான்மையை பெற்றுத் தந்த போதிலும், எதிர்க்கட்சித் தலைவரிடம் தமது பிரச்சினைகளைச் சொல்லும் நிலையையே இன்று நாடு அடைந்துள்ளது.

பதில்களையும் தீர்வுகளையும் எதிர்பார்த்து தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கினாலும், மக்கள் எதிர்பார்த்த பதில்களையும் தீர்வுகளையும் இதுவரை வழங்கியபாடில்லை.

வரலாற்றில் முதல்முறையாக, இந்த நாட்டு மக்கள் அதிகாரம் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பிரச்சினைகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து ஏதேனும் தீர்வுகளைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்போம்.

எதிர்க்கட்சி இதற்கான தீர்வுகளையும் பதில்களையும் பெற்றுத் தர முடியுமான சகல வழிகளில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்டம், கலாவெவ தேர்தல் தொகுதி, கட்டியாவ பிரதேசத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு ஆகியவற்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

கலாவெவ பிரதேசத்தில் விவசாயத்தில் ஈடுபடும் பெரும்பாலான மக்கள் காணப்படுகின்றனர்.

இலங்கையில் முதல் விவசாயக் குடியிருப்புப் பிரதேசம் உருவாக்கப்பட்ட இந்த மண்ணில் உள்ள விவசாயிகளுக்கு தற்போதைய அரசாங்கத்திடமிருந்து உரிய சலுகையும் ஒத்துழைப்புகளும் கிடைத்தபாடில்லை.

இன்று, விவசாயிகளுக்கு பொருத்தமான உயர் தரத்தில் அமைந்த விதைகள், உரங்கள், பூச்சி நாசிணிகள் போன்றவை கிடைப்பதில்லை.

விவசாய நடவடிக்கைகள் முடிந்த பின்னரே உர மானியம் இவர்களை வந்து சேருகிறது.

உரத்தின் தரத்தில் பிரச்சினை காணப்படுகின்றன. யானை மனித மோதல்களையும் இவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.

ஒரே ஒரு கையெழுத்து இடுவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்போம் எனக் கூறினர்.

இன்றுவரை எதுவும் நடந்த பாடில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மத்தியில், தமது அறுவடையை விற்கச் செல்லும்போதும் இவர்களுக்கு நியாயமான விலை கிடைத்தபாடுமில்லை.

தற்போதைய விவசாயத் துறை அமைச்சரின் கூற்றுப்படி, வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வது நல்லது என கூறுகிறார்.

தேர்தல் காலத்தில் வயல்களுக்குள் இறங்கி, பயிரை அறுவடை செய்து, உத்தரவாத விலையை சட்ட விதிமுறைகள் ஊடாக பெற்றுத் தருவோம் என தற்போதைய விவசாய அமைச்சரே அன்று தெரிவித்தார்.

இன்று ஈர நெல் ரூ.90 முதல் 95 வரையிலும், ஏனைய நெல் ரூ.120க்குமே கொள்முதல் செய்யப்படுகின்றன. வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ.150 உத்தரவாத விலை கிடைத்தபாடில்லை.

பெரும் களஞ்சியசாலைகளை நிறுவுவோம் என பெரிதாக கூறிய அமைச்சரால் இருக்கும் களஞ்சியங்களை நிரப்புவதற்கே இன்று அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்தபாடுமில்லை.

இது குறித்து பாரளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பும் போது எதிர்க்கட்சியினரின் வாயை மூட ஆளும் தரப்பினர் முயற்சிக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைக்கும்போது ஒலிவாங்கி துண்டிக்கப்பட்டால், விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்ந்து விடாது.

உலகெங்கிலும் உள்ள நாடுகள் விவசாயத்தின் மூலம் வளர்ச்சியடைந்து வரும் அதே வேளையில், நமது நாட்டில் உள்ள முதலாலித்துவ வர்க்கத்தைச் சார்ந்திருக்கும் தரப்பினர் விவசாயம் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

விவசாயத்தை வெற்றிகரமனதாக்க எதிர்க்கட்சி செய்ய முடியுமான சகல தலையீடுகளையும் செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts

அம்பாறை, பொத்துவில் பகுதியில் பஸ் விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்!

editor

நாடு முழுவதும் தட்டம்மை தடுப்பூசி திட்டம்!

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 3வது தடுப்பூசி