அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் திட்டத்திற்கு தேசிய அளவிலான வேலைத்திட்டம் அவசியம் – ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட தேசிய அளவிலான வேலைத்திட்டம் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது உள்ள அரசியல் இடைவெளிகளை நிரப்ப, ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என கூறப்படுகிறது.

கட்சி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில், கிராமப்புற மக்களை அரசியல் திட்டத்தில் இணைக்க வழி வகுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை.

மேலும், தேசிய அளவிலான திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், புதிய அமைப்பாளர்கள் நியமிக்கவும், திறமையற்ற நிர்வாகிகளை நீக்கவும் வேண்டும் என சிரேஷ்ட உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Related posts

மகளிர் தினத்தை முன்னிட்டு சேவை நலன் கௌரவிப்பு – கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

editor

நாடளாவிய ரீதியிலான சுற்றிவளைப்புகளில் 1,676 பேர் கைது!

கைது செய்யப்பட்ட 11 அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை