வகைப்படுத்தப்படாத

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதிக்கு டிரம்ப் வலியுறுத்தல்

(UTV|AMERICA)-ஈரான் உடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதையடுத்து, அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்தது.

மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் மாதம் 4-ந் தேதியுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

உலக அளவில் பிரதான எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கி வரும் ஈரானுக்கு இப்படி நெருக்கடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

இதன் காரணமாக வாகனங்களுக்கான எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர, சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப், சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, அவர் சர்வதேச எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு சவுதி அரேபியா, நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்கள் வரை எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அதனை ஏற்றுக்கொண்ட மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். இந்த தகவலை டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்

පාසැල්වල අතර මැදි ශ්‍රේණි සඳහා සිසුන් ඇතුලත් කිරීමට අවස්ථාව

Two drug traffickers held by Navy in Hambantota