உள்நாடு

எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது தொடர் நாளை மறுதினம்

(UTV|COLOMBO) – எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடரை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 3ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பின் 70 ஆவது அத்தியாயத்தின் முதலாம் உறுப்புரைக்கு அமைய, பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

இதற்கமைய, கடந்த 2 ஆம் திகதி, விசேட வர்த்தமானி மூலம் பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய மின்வெட்டில் மாற்றங்கள்

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

editor

சம்மாந்துறை நெய்னாகாடு பகுதியில் நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு!

editor