சூடான செய்திகள் 1

ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

(UTVNEWS|COLOMBO) – ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் இன்று(08) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

அதற்கமைய, மாகாண சபையின் அதிகாரம் ஊவா மாகாண ஆளுனரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

நாட்டின் ஏனைய மாகாண சபைகளின் பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்து அவை கலைக்கப்பட்டுள்ள நிலையில் ஊவா மாகாண சபை மாத்திரம் செயற்பட்டது.

இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் நாட்டின் சகல மாகாண சபைகளின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

Related posts

பம்பலப்பிடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவல்

நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தயான் லன்சா தெரிவு

சாய்ந்தமருது கபீரின் மறைவுக்கு, அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனுதாபம்