உள்நாடு

ஊரடங்கு காலப்பகுதியில் 8,151 வாகனங்கள் பறிமுதல்

(UTVNEWS | கொவிட் – 19) -ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 29  நாட்களுக்குள் 31 ஆயிரத்து 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 8151 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்று(18) காலை 6 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1392 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களின் 381 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்பதுடன், அவை வைரஸ்  தொற்று கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் உரிய தரப்பினருக்கு கையளிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளன.

Related posts

முதன் முதலாக யாழ்ப்பாணம் சென்ற ஆதிவாசிகள்!

காசா எல்லைகளின் மீதான குண்டுத் தாக்குதல்களை கண்டிக்கிறோம் – . ரணில்விக்ரமசிங்க

அடையாள வேலைநிறுத்தம் தொடர்பில் தபால் ஊழியர்கள் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

editor