உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 77,877 பேர் கைது

(UTV | கொழும்பு) –   நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 77,877 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றுக் காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் மேலும் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த காலகட்டத்தில் 25 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 1,309 பேரும் 912 வாகனங்களும் மாகாணத்தை விட்டு வெளியேற முயன்ற 1,258 பேரும் 837 வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அவர்களுள், முறையான அனுமதிப்பத்திரத்தை கொண்டிருக்காத 329 பேரும் 176 வாகனங்களும் திருப்பி விடப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

Related posts

தளம்பல் நிலை காரணமாக அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

editor

உக்ரேன் – ரஷ்யா மோதல் : இலங்கை வாக்களிக்கவில்லை

வாகன விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு