உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 50,009 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 12 ஆயிரத்து 975 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 225 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 127 பேர் பூரண குணம்

பெட்ரோல் குறித்து அரசின் தீர்மானம்

அஸ்வெசும நலன்புரி திட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலதிக கால அவகாசம் வழங்க தீர்மானம்

editor