உள்நாடு

ஊடகவியலாளர்களுக்கு உடனடி அன்டிஜன் பரிசோதனை

(UTV | கொழும்பு) – பாராளுமன்றுக்கு வருகை தரவுள்ள ஊடகவியலாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் போது, பாராளுமன்றுக்கு வருகைதரும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் உடனடி அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அன்றைய தினம் காலை 7 மணி தொடக்கம் 10 மணி வரை இவ்வாறு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாட்டாளி வர்க்கத்தினரை பிரதிநிதித்துவப்படுத்திய அநுர ஜனாதிபதியானதன் பின்னர் தொழிலாளர் வர்க்கத்தை மறந்து செயல்பட்டு வருகிறார் – சஜித் பிரேமதாச

editor

சபாநாயகரை சந்தித்தார் பொலிஸ் மா அதிபர்

editor

கொழும்பு கிரிஷ் கட்டிட தீ பரவலுக்கான காரணம் வௌியானது – பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

editor