உள்நாடுபிராந்தியம்

உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி!

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில் நேற்று (02) இரவு வேளையில் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

12 கொளனி பகுதியில் இருந்து சம்மாந்துறை நோக்கி உழவு இயந்திரத்தில் “excavator” ஏற்றி வரும் போது விலாவடி சந்தி பகுதியில் உழவு இயந்திரத்தை வலது பக்கமாக முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனக்குறைவால் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் மரணமடைந்தவர் சம்மாந்துறை மலையடிக்கிராமம் 03 பகுதியைச்சேர்ந்த 20 வயதுடைய அப்துல் நசீர் முகம்மது அசீல் என்பதுடன், சம்மாந்துறை மலையடிக்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய உழவுஇயந்திர சாரதியை சவளக்கடை பொலிஸ் கைதுசெய்துள்ளனர். அத்துடன் உழவு இயந்திரத்தையும் கைப்பற்றி உள்ளனர்.

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரின் உத்தரவிற்கமைய சவளக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவுப் பொறுப்பதிகாரி சகிதம் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

விபத்துச்சம்பவத்தில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு மரண விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்கப் பணித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தில் சவளக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதான சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

editor

பலஸ்தீன் போர் நிறுத்தத்திற்கு ஐநாவின் வாக்களிப்பு: அமெரிக்கா எதிர்த்து வாக்களிப்பு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய இல்லத்தில் மரணம்!