அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரை தபால் ஊழியர்களின் விடுமுறைகளை இரத்து செய்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாலேயே விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Related posts

அமுலில் உள்ள ஊரடங்கு நீடிக்கப்படுமா?

குறைகிறது மின் கட்டணம் – ஆணைக்குழு ஒப்புதல்

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?