விளையாட்டு

உலக டென்னிஸ் தரவரிசை : நவோமி ஒசாகா 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

(UTV | கொழும்பு) – உலக டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்க பகிரங்க பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி முடிவை தொடர்ந்து புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.

இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் (செர்பியா) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) நம்பர் ஒன் இடத்திலும், சிமோனா ஹாலெப் (ருமேனியா) 2-வது இடத்திலும் உள்ளார்.

அமெரிக்க பகிரங்க பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

அரைஇறுதியில் தோல்வி கண்ட செரீனா வில்லியம்ஸ் ஒரு இடம் பின்தங்கி 9-வது இடம் பெற்றுள்ளார். அரைஇறுதியில் தோற்ற அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 16 இடங்கள் உயர்ந்து 25-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.

Related posts

சனத் ஜயசூரியவிற்கு கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 2 ஆண்டுகள் தடை

U-19 ஆசிய கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் அணி!

ஜப்பானில் வெற்றிவாகை சூடிய போட்டியாளர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்