கிசு கிசு

உலகில் மிக அழகான பெண் இவரா?

2018ம் ஆண்டிற்கான உலகின் மிக அழகிய பெண்களுக்காக விருதுகள் பட்டியலில் 17 வயதான திலேன் ப்ளோன்டாவ் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பிரஞ்சு கால்பந்து வீரர் பேட்ரிக் ப்ளோன்டாவ் மற்றும் நடிகையும், ஆடை வடிவமைப்பாளருமான லியோபிரியாவிற்கு பிறந்த மகள் தான் திலேன் ப்ளோன்டாவ் (17).

இவர் 4 வயதிலே மொடல் அழகியாக உருவெடுத்து, 6 வயதில் ‘உலகில் மிக அழகிய பெண்’ என அனைத்து தலைப்பு செய்திகளிலும் இடம்பிடித்தார்.

இந்த நிலையில் TC கேண்டலரின் வருடாந்திர விருதுகள் பட்டியலில் ஆண்டின் மிக அழகான 100 முகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பிரபலங்கள் பலரையும் பின்னுக்கு தள்ளி திலேன் ப்ளோன்டாவ் முதலிடம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள திலேன், இது என்னால் நம்பமுடியவில்லை … @ tccandler மற்றும் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நான் முதலிடம் பிடிப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.

உங்கள் அனைவருக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த விடுமுறையை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை உங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

 

 

Related posts

ரஜினி தொடர்பில் நாமல் கருத்து

ஹரின் மீண்டும் UNP இல் இணைகிறார்

இனவாதத்தினை தூண்டும் அம்பாறை பிரதேச செயலகம்