உள்நாடு

‘உலகளாவிய பதற்றங்களை மேலும் அதிகரிக்கும் தூண்டுதல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்’

(UTV | கொழும்பு) –  ஒரே சீனா கொள்கைக்கான உறுதியான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhengong ஐ சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது டுவிட்டர் செய்தியில், ஒரே சீனா கொள்கைக்கு இலங்கை தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய ஐ.நா சாசனக் கோட்பாடுகளுக்கு இலங்கையும் தனது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“தற்போதைய உலகளாவிய பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் தூண்டுதல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும்” என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறினார்.

பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை ஆகியவை அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதலின்மைக்கான முக்கியமான அடித்தளங்களாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அமெரிக்க அதிகாரி நான்சி பெலோசியின் சமீபத்திய தைவான் விஜயம் தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இலங்கை ஜனாதிபதியின் கருத்துக்கள் இவ்வாறு அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை பொலிஸின் சமூக ஊடக கணக்குகள் மீது சைபர் தாக்குதல் – YouTube தவிர ஏனைய வலைத்தளங்கள் வழமைக்கு

editor

சற்று முன்னர்- மேலும் 609 பேருக்கு கொரோனா

சற்றுமுன்னர் 06 பேர் அடையாளம்