விளையாட்டு

உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டி

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி இன்றிரவு இங்கிலாந்து செல்லவுள்ளது.

இலங்கை, அவுஸ்திரேலியாஇ இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்துஇ பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீர்வுகள் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இலங்கை அணிக்கு இனோகா ரணவீர தலைமை தாங்குகின்றார். இலங்கை அணி சில பயிற்சிப் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது.

இந்தப் போட்டித் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை முதல் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை இங்கிலாந்தின் நான்கு மைதானங்களில் நடைபெறும். இலங்கை மகளிர் அணி பங்கேற்கும் முதலாவது போட்டி நியூசிலாந்து அணியுடன் நடைபெறும்.

Related posts

இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூவர் விலகல்

இந்திய அணி வெற்றி

T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை