உள்நாடு

உறுப்புரிமை நீக்கம் – தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட 115 நபர்களின் பெயர் விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று(30) ஒப்படைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை மத்திய செயற்குழுவின் தீர்மானங்களுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து 115 உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக கட்சி தலைமையகம் நேற்று முன் தினம் (28) தெரிவித்திருந்தது.

இந்நிலையில் உறுப்புரிமையில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அதனை தெரியப்படுத்தும் கடிதங்கள் இன்று தபால்மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பஸ் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வேன் ஒன்று விபத்தில் சிக்கியது – 12 பேர் வைத்தியசாலையில்

editor

அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியின் தவறான முடிவு – பொதுஜனபெரமுன

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது