வணிகம்

உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) – உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதன் கீழ் பெரும்போகத்தில் நெற்செய்கையாளர்கள் ஒன்பது இலட்சம் பேருக்கும் வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் பேருக்கும் உர மானியம் வழங்கப்படவிருப்பதாக உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில தெரிவித்தார்.

நெற் செய்கைக்குத் தேவையான உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரம் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக உர மாநியத்திற்காக அரசாங்கம் 7,000 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது என உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கூகிள் நிறுவனம் Location Data; தகவல்களை பகிரவுள்ளது

தங்கம் பவுண் ஒரு இலட்சத்தினை கடக்கும் நிலை

எதிர்வரும் மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி