உள்நாடு

உரங்களின் விலைகள் குறைப்பு.

அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகளை நேற்று (17) முதல் குறைக்கவுள்ளதாக அரச உர நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி உரத்தின் விலையை 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.

கறுவா, தேயிலை, தென்னை போன்ற பெருந்தோட்டப் பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் உரங்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, அரச உரக் கம்பனிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உர விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 9000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் APM உரம் 7200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

8000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் YPM உரம் 6200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

9750 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் கறுவா(யூரியா) உரம் 7950 ரூபாயக குறைக்கப்பட்டுள்ளது.

8000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் கறுவா(SA) உரம் 6200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

11000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ கிராம் TDM உரம் 9200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று

editor

சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழு மீண்டும் கூடுவதற்கு தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக தேசியப்பட்டியல் எம்.பி கிடைக்கும் – ரிஷாட் எம்.பி நம்பிக்கை!

editor