வகைப்படுத்தப்படாத

உயிர்நீத்த படைவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட விகாரை புனர்நிர்மாணம்

(UDHAYAM, COLOMBO) – திம்புலாகலமட்டக்களப்பு சந்திக்கருகிலுள்ள பிரதேச செயலக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த விகாரையை புனர்நிர்மாணத்தின் பின் திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

நாட்டுக்காக உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் வகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்த விகாரையை நேற்று முன்தினம் புனர்நிர்மாணத்தின் பின் ஜனாதிபதி திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, மாகாண சபை உறுப்பினர் ஜகத் சமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

ஒரு லட்சம் பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு திட்டம்

ஹட்டனுக்கு சுற்றுலா சென்ற 5 இளைஞர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்கு

සරසවි උපාධිධාරින් 16,800 කට රජයේ පත්වීම්