உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு இழப்பீடு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட 661 பேருக்கு இழப்பீடாக 31 கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய பிரதிவாதிகளிடமிருந்து பெறப்பட்ட நட்டஈட்டுத் தொகையிலிருந்து இவ்வாறு பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதிவாதிகளிடமிருந்து வசூழிக்கப்பட்ட நட்டஈட்டிலிருந்து 99.78 சதவீதம் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

Related posts

‘ஜசீரா’ விமான சேவை ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் தனிப்பட்ட செயலாளர் CIDக்கு அழைப்பு

editor

அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்குவோம், தவறை சுட்டிக்காட்டுவோம் – சஜித்

editor