அரசியல்உள்நாடு

உயிருடன் இருக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன் – முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

தாம், காலமாகிவிட்டதாக வௌியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, உயிருடனுள்ள வரைக்கும் அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொலைபேசிகளூடாக வௌியான இச்செய்தியைக் கேட்டவுடன் ஒருவித நகைச்சுவை உணர்வுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது, தமது ஆயுளை நீடிக்கும் என்று சிலர் நம்புவதாகவும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டுகிறார்.

இருப்பினும், இந்த செய்தியை யார் வெளியிட்டார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதில் தமக்கு ஆர்வம் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

உயிருடனிருக்கும் வரைக்கும் அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் பாராளுமன்றத் தேர்தலில் இனி, போட்டியிடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக இலவசமாக வழங்கப்படுகின்ற பேசா விசா கோரி ஆளும் கட்சி எம்.பிக்கள் அழுத்தம்

editor

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி

editor

சமய வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி அநுர

editor