உள்நாடு

உயர் தரப்பரீட்சை மீண்டும் ஆரம்பம் – திகதி அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் உயர் தரப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அதேநேரம் ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்களுக்காக மாத்திரம் மூன்றாம் தவணை பரீட்சை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் 2 இலட்சம் தேங்காய்கள் விநியோகம்

editor

பணிக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்