உள்நாடு

உயர்தரப்பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு) – 2020ம் ஆண்டு க. பொ.த உயர்த்தரத்திற்கு செல்லும் மாணவர்கள் நாளை முதல் ஒன்லைன் (online) முறை மூலம் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு இன்று(11) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உயர்த்தர வகுப்புக்கு செல்ல தயாராகும் மாணவர்கள் கல்வி அமைச்சின் www.info.moe.gov.lk  என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் எனவும் விண்ணப்பதாரர் ஒருவருக்கு 10 பாடசாலைகள் வரை விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் ஜுன் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

புகைப்பிடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிப்பு

editor

பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாக எமது பயணம் அமையும்

Online சட்டமூலம் தொடர்பில் வௌியான முக்கிய அறிவிப்பு!